×

ஓசூர் வனப்பகுதியில் 30 யானைகள் முகாம்: வனத்துறை எச்சரிக்கை

ஓசூர்: ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் கால்நடைகள் மேய்க்க, விறகு சேகரிக்க காட்டிற்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுயானைகள், ஓசூர் அருகே தேன்கனிகோட்டை வனப்பகுதி வழியாக சானமாவு வனப்பகுதிக்கு வந்துள்ளன. 30க்கும் மேற்பட்ட யானைகள் அங்கு முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் வனப்பகுதியில் சுற்றிவருவதால் வனப்பகுதியொட்டி உள்ள சான மாவு, பீர்ஜேப் பள்ளி, ராமாபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனிடையே வனத்தையொட்டி கிராமங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்கும்படியும், வனப்பகுதிக்குள் ஆடு, மாடுகளை மேய்க்கவும், விறகுகளை சேகரிக்கவும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பகல் நேரத்தில் வனப்பகுதிக்கு அருகே உள்ள விவசாய தோட்டங்களில் பாதுகாப்பாக வேலை செய்யும்படியும். மாலை மற்றும் இரவு நேரத்தில் வனத்தையொட்டி உள்ள தோட்டங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் கிராமமக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வரும் வனத்துறையினர் அவைகளை கர்நாடக மாநில வனப்பகுதிக்குள் விரட்ட திட்டமிட்டுள்ளனர்.

The post ஓசூர் வனப்பகுதியில் 30 யானைகள் முகாம்: வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Hosur forest ,Forest Department ,Hosur ,Sanamau Forest ,Dinakaran ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...