×

வாழைத்தண்டு தோசை

தேவையானவை:

இட்லி அரிசி – 1 கப்,
புழுங்கல் அரிசி – 1 கப்,
முழு உளுந்து – ¼ கப்,
நறுக்கிய வாழைத்தண்டு – 2 கப்,
வெந்தயம் – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 தேக்கரண்டி,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றை நன்கு அலம்பி 3 மணி நேரம் ஊறவிடவும். தேவையான உப்பு சேர்த்து நறுக்கின வாழைத்தண்டுகளை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த மாவில் சீரகம் சேர்த்து 7 மணி நேரம் புளிக்க விடவும். தோசைகள் பொன்னிறமாக வார்த்து எடுக்கவும்.

The post வாழைத்தண்டு தோசை appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஜவ்வரிசி கொழுக்கட்டை