×

பால் அல்வா

தேவையான பொருட்கள்

பால் – 2 கப்
சர்க்கரை – 3/4 கப்
நெய் – 1/2 கப்
ரவா – 1/4 கப்.

செய்முறை

மேற்கூறிய அனைத்தையும் ஒரு அடி கனமான வாணலியில் போட்டு, மிதமான தீயில் வைத்து, கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டிருக்கவும். அல்வா கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது, இறக்கி விடவும். ஒரு கிண்ணத்தில் சிறிது நெய் தடவி அதில் அல்வாவைக் கொட்டி வைக்கவும்.இதற்கு வாசனைப் பொருட்கள் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. பால்கோவா போன்ற சுவையுடன் இருக்கும். விருப்பப்பட்டால், சிறிது பாதாம் அல்லது பிஸ்தா பருப்பைப் பொடியாக நறுக்கித் தூவி பரிமாறலாம்.இதை மைக்ரோ அவனிலும் செய்யலாம். எல்லாப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு (மைக்ரோ அவனில் வைக்கக்கூடிய பாத்திரம்) 8 முதல் 10 நிமிடங்கள் வரை அல்லது அல்வா சரியான பதம் வரும் வரை வைத்திரு ந்து எடுக்கவும். ஆனால் இடை இடையே இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை பாத்திரத்தை வெளியே எடுத்துக் கிளறி விடவும்.

The post பால் அல்வா appeared first on Dinakaran.

Tags : Milk Alva ,
× RELATED பாதாம் மில்க் அல்வா