×

சீனாவை அச்சுறுத்தும் நிமோனியா காய்ச்சல்: தயார் நிலையில் இந்தியா..!

டெல்லி: நிமோனியா காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவில் பெய்ஜிங் மற்றும் லியோனிங் மாகாணங்களில் அதிகளவில் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு காணப்படுகிறது. மேலும் சுவாச பிரச்னைகளையும் பலர் எதிர்கொண்டுவருவதாகவும் கூறப்படுகின்றது. சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று வேகமாகப் பரவி வருவதால் அது குறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் நிமோனியா காய்ச்சல் பரவி வருவதை அடுத்து அதனை எதிர்கொள்ள இந்தியா தயார்நிலையில் உள்ளதாக ஒன்றிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; நிமோனியா காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளது. எந்தவிதமான நெருக்கடிகளையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நிமோனியா, நுரையீரலை கடுமையாக பாதிக்கக்கூடியது.

இந்தியாவில் நிமோனியா காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சீனாவில் பரவும் நிமோனியா காய்ச்சலால் இந்தியாவில் பாதிப்பு இருக்காது. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சீனாவை அச்சுறுத்தும் நிமோனியா காய்ச்சல்: தயார் நிலையில் இந்தியா..! appeared first on Dinakaran.

Tags : Delhi ,India ,Union Health Department ,China ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவி...