×

பரந்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த நிர்வாக ஒப்புதலை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: பரந்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த நிர்வாக ஒப்புதலை தமிழக அரசு வெளியிட்டது. 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக ரூ.19.24 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மச்சேந்திரநாதன் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். பரந்தூர் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் விமான நிலைய பணிகளுக்கு நிலம் எடுப்பதற்கான நிர்வாக அனுமதியை தமிழக அரசு வழங்கியது.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைவதாக வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 20 கிராமங்களில், 5,700 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கான அறிவிப்பு, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானதில் இருந்தே, விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களில் வசிப்போர், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விமான நிலையம் அமைய இருக்கும், 20 கிராமங்களில், 5,700 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதில், நஞ்சை நிலமாக, 2,630 ஏக்கரும், தரிசு நிலமாக 959 ஏக்கரும், மானாவரியாக 18 ஏக்கரும், நத்தமாக 88 ஏக்கரும், அரசு நிலங்களாக 1,995 ஏக்கர் உட்பட, மொத்தம் 5,727 ஏக்கர் நிலங்கள் எடுக்க உள்ளன. அரசு கையகப்படுத்த இருக்கும் நிலங்களில், நஞ்சை நிலமாகவே, 2,600 ஏக்கருக்கும் மேலாக உள்ளன.

பரந்தூரில் விமான நிலையம் அமைய கூடாது என அந்த பகுதி மக்கள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், பரந்தூர் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் விமான நிலைய பணிகளுக்கு நிலம் எடுப்பதற்கான நிர்வாக அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பரந்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த நிர்வாக ஒப்புதலை வெளியிட்டது தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Bharandoor Airport ,Chennai ,Barantur Airport ,Dinakaran ,
× RELATED சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில்,...