×
Saravana Stores

திருவண்ணாமலையில் பரணி தீபம், மகா தீபத்தை காண முன்பதிவு செய்ய முடியாமல் பக்தர்கள் தவிப்பு


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பரணி தீபம், மகா தீபத்தை காண முன்பதிவு செய்ய முடியாமல் பக்தர்கள் தவித்து வருகிறார்கள். ஆன்லைனில் முன்பதிவு டிக்கெட் பெற முடியவில்ல என பகதர்கள் குற்றசாட்டு வைத்துள்ளனர். மொபைல் எண், மெயில் ஐடி தவறு என வருவதால் முன்பதிவு செய்ய முடியவில்லை என குற்றசாட்டு வைத்துள்ளனர். www.annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையத்தளத்தில் கோளாறு என புகார் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்பதிவு செய்ததால் கோயில் இணையதளம் முடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா நாளைய தினம் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில் பத்து நாட்கள் உற்சவர்கள் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது.

பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.

மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரமானதாகும். மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை தீபத்திருவிழாவில் கடந்த ஆண்டு 25 லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து எப்போதும் இல்லாத அளவில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம், மகா தீபத்தை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கு இன்றுமுதல் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. மலையேறும் பக்தர்கள் www.annamalaiyar.hrce.tn.gov என்ற இணைய தளம் வாயிலாக இன்று முதல் அனுமதிச்சீட்டு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் பரணி தீபம், மகா தீபத்தை காண முன்பதிவு செய்ய முடியாமல் பக்தர்கள் தவித்து வருகிறார்கள். ஆன்லைனில் முன்பதிவு டிக்கெட் பெற முடியவில்ல என பகதர்கள் குற்றசாட்டு வைத்துள்ளனர்

 

The post திருவண்ணாமலையில் பரணி தீபம், மகா தீபத்தை காண முன்பதிவு செய்ய முடியாமல் பக்தர்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Maha ,Tiruvannamalai ,Thiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலை அருகே இன்று விபத்து;...