×

உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் காலை 11.30 மணிக்கு டிரில்லிங் பணி மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் தகவல்..!!

டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் காலை 11.30 மணிக்கு டிரில்லிங் பணி மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா – பர்கோட் இடையே 4.5 கி.மீ தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணியை மாநில சாலை மற்றும்போக்குவரத்து துறை மேற்கொண்டது. இங்கு கடந்த 12-ம் தேதி மண் சரிவு ஏற்பட்டதால், சுரங்கப் பாதைக்குள் பணியாற்றிய 41 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கினர். இவர்களை மீட்கும் முயற்சி 13 நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. நள்ளிரவில் துளையிடும் இயந்திரத்தை தாங்கி நிற்கும் அடித்தளம் உடைந்ததால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு மீட்பு பணி நிறுத்தப்பட்டது.

மீட்புப்பணியின் போது ஆகர் இயந்திரம் பொறுத்தப்பட்டிருந்த கான்க்ரீட் தளம் சேதமடைந்தது. கான்க்ரீட் தளத்தை சரி செய்யும் பணி இரவு நடைபெற்றது. இந்நிலையில், காலை 11.30மணிக்கு மீண்டும் துளையிடும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாலை 6மணிக்கு துளையிடும் பணி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துளையிடும் இயந்திரத்தின் கான்கிரீட் அடித்தளம் அமைக்கும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில் மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

சுரங்கப்பாதையை இன்னும் 14 மீட்டர் துளையிட வேண்டும்:

சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை அடைய இன்னும் 14 மீட்டர் துளையிட வேண்டும். இன்று மாலைக்குள் 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். துளையிடும் ஆகர் எந்திரம் நன்றாக செயல்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அடுத்த 5 மீட்டர் தூரத்துக்கு எந்த உலோக அடைப்புகளும் இல்லாததால் எளிதாக துளையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் காலை 11.30 மணிக்கு டிரில்லிங் பணி மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Dehradun ,Dinakaran ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ