×

ஆழ்வார்திருநகரி வட்டார விவசாயிகளுக்கு உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி

நாசரேத், நவ. 24: மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் ஆழ்வார்திருநகரி வட்டாரம் வெள்ளமடத்தில் விவசாயிகளுக்கு நெற்பயிரில் பண்ணைப்பள்ளி பயிற்சி நடந்தது. பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்து நடப்பாண்டு மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானியம் பற்றி எடுத்துரைத்தார். வாகைக்குளம் வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் முருகன், நடப்பு பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள், நெல் விதை நேர்த்தி, நாற்றங்கால் பராமரிப்பு, நெல்லில் உர மேலாண்மை மற்றும் நுண்ணூட்ட உரம் பற்றி விரிவான வகுப்பறை மற்றும் வயல்வெளியிலும் பயிற்சி அளித்தார். இதில் 25 விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். ஏற்பாடுகளை தொழில்நுட்ப மேலாளர் ஜேசுதாசன், உதவி தொழில்நுட்ப மேலாளர் நளினி, சூசைமாணிக்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

The post ஆழ்வார்திருநகரி வட்டார விவசாயிகளுக்கு உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Alwarthinagari district ,Nazareth ,Vellamadam ,School ,Dinakaran ,
× RELATED சிலம்ப போட்டியில் வெற்றி: நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு