×

சிறப்பு மருத்துவ முகாம்

 

குமாரபாளையம், நவ.24: கலைஞர் நூற்றாண்டு விழா பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில், 217 நகராட்சி பணியாளர்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்.
குமாரபாளையம் நகராட்சியில், கலைஞர் நூற்றாண்டு விழா பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் சரவணன் தலைமை தாங்கி பேசினார். நகரமன்ற தலைவர் விஜயகண்ணன் முகாமை தொடங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி வரவேற்றார்.

எலந்தகுட்டை வட்டார மருத்துவ அலுவலர் திவ்யா தலைமையிலான மருத்துவர் குழுவினர் நகராட்சி பணியாளர்கள், அலுவலர்கள் ஆகியோருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்றது. முகாமில் 217 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் சந்தானகிருஷ்ணன், ஜான்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Special Medical Camp ,Kumarapalayam ,Artist ,Centenary ,Pannoku Special Medical Camp ,Dinakaran ,
× RELATED புதுப்பிக்கப்பட்ட அண்ணா கலைஞர் நினைவிடம் திறப்பு..!!