×

மானாமதுரை மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மானாமதுரை, நவ.24: மானாமதுரை ஒவெசெ பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை எம்எல்ஏ தமிழரசி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மானாமதுரை ஒன்றியம் ஒ.வெ.செ மேல்நிலைப்பள்ளி பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பாக 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ,மாணவிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முகாமில் ஏராளமான பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்கள், என்ஐடி மற்றும் யூடிஐடி அடையாள அட்டை பதிவு, மருத்துவ உபகரணங்கள், இஎன்டி மருத்துவ ஆலோசனை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கான பதிவு மற்றும் உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, முன்னாள் பேரூராட்சி தலைவர் துரைராஜாமணி, நகர செயலாளர் பொன்னுசாமி, நகர்மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம், ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, வார்டு கவுன்சிலர்கள் சித்ரா மன்னர்மன்னன், ராஜேஸ்வரி ராஜேந்திரன், லட்சுமி சங்கிலி, சதீஷ்குமார், செல்வகுமார் அரசுத்துறை அதிகாரிகள், திமுக கட்சி ஒன்றிய, நகர, ஊராட்சி நிர்வாகிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post மானாமதுரை மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,MLA Tamilarasi ,Manamadurai Ovese School ,Manamadurai Medical ,Camp ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...