×

போடி அருகே கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

போடி, நவ. 24: போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சியில் கண்மாய் மற்றும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் அகற்றினர். போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சி அம்மாபட்டி கிராம ஊராட்சி எல்லையில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மீனாட்சியம்மன் கண்மாய் உள்ளது. இதன் கரையில்  கடைகள், உணவகங்கள், பேரூராட்சி பழைய அலுவலகம், மேல் நிலைத் தொட்டிகள் உள்ளன.இந்நிலையில் கால்வாய்கள், கண்மாய்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ந்தது.

இதனையடுத்து பொதுப்பணித்துறையினர், நேற்று முன்தினம் கண்மாய் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள், வீடுகள், கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை ஜேசிபி எந்திரம் கொண்டு அகற்றினர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது ஆக்கிரப்பு அகற்றப்பட்டு வருகிறது. மீதியுள்ள கட்டிடங்களும் இடிக்கப்பட்டு மீனாட்சியம்மன் கண்மாய் கரையை குளத்துடன் விரைவில் இணைக்கப்படும் என்றார்.

The post போடி அருகே கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Meenakshipuram ,Dinakaran ,
× RELATED போடி-தேவாரம் சாலையில்...