×

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்: மாவட்ட செயலாளர் அறிவிப்பு

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மத்திய மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் வருகிற 28ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் திருவள்ளூர் அடுத்த காக்களூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் ராஜி தலைமை தாங்குகிறார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, கே.ஜெ.ரமேஷ், மாநில மாணவரணி இணைச் செயலாளர் ஜெரால்டு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், காயத்திரி ஸ்ரீதர், ஜெயபாலன், நரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் எத்திராஜ், ராஜேந்திரன், விமல்வர்ஷன், முத்தமிழ்செல்வன், குமார், மகாதேவன், காஞ்சனா சுதாகர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் வரவேற்கிறார்.

இந்த கூட்டத்தில் வருகிற 26ம் தேதி சென்னையில் கழகத் தலைவர் தலைமையில் நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள் குறித்தும், டிசம்பர் 17ம் தேதி அன்று சேலத்தில் நடைபெறும் மாநில இளைஞரணி மாநாட்டு பணிகள் குறித்தும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு பாக முகவர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், நீட் விளக்கு கையொப்பம் இயக்கம் துரிதப்படுத்தல் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

எனவே இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், அணிகளின், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்: மாவட்ட செயலாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Central District DMK ,Thiruvallur Central District DMK ,Avadi S.M. Nasar ,MLA ,
× RELATED ஆவடி நாசர் எம்எல்ஏ அறிக்கை மத்திய மாவட்ட திமுக அவசர ஆலோசனை கூட்டம்