×

அண்ணாநகரில் பரபரப்பு போதையில் கார் ஓட்டி விபத்து: வாலிபர் கைது

அண்ணாநகர்: புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (31). இவர் நேற்று முன்தினம் தனது விலையுயர்ந்த காரை சாலையோரம் நிறுத்திவிட்டு நண்பர்களுடன் அண்ணாநகர் 1வது அவென்யூ அருகே சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் திடீரென, தறிகெட்டு ஓடி, பிரகாஷின் காரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 கார்களும் நொறுங்கின. தகவலறிந்த அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து ஏற்படுத்திய வாலிபரை கைது செய்து, சேதமடைந்த 2 கார்களையும் மீட்டனர்.

விசாரணையில், அண்ணாநகர் எல்.பிளாக் பகுதியை சேர்ந்த சஞ்சய் (22), மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, கொலையாகாத மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்ய முயற்சித்தல் (308), உயிருக்கு அல்லது தனிநபருடைய பாதுகாப்புக்கு ஒரு செயலால் காயம் ஏற்படுத்துதல் (337) ஆகிய 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து, சஞ்சய்யை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

 

The post அண்ணாநகரில் பரபரப்பு போதையில் கார் ஓட்டி விபத்து: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Prakash ,Puduppet ,
× RELATED நாளை விசாரணைக்கு ஆஜராக டிடிஎஃப் வாசனுக்கு போலீஸ் சம்மன்