×

அரசு கட்டிட பணிகளை கலெக்டர் ஆய்வு

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நகராட்சியில் உள்ள பழமை வாய்ந்த அரசு பயணியர் விடுதியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நகரமன்ற அலுவலக கட்டிடமும், ரூ.3 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் வண்டலூர் தாசில்தார் அலுவலக கட்டிடமும் இதேபோல், கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலை ஓரத்தில் உள்ள நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் ரூ.1 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் மைய கட்டிடமும் கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், கடந்த 11 மாதங்களாக மந்தகதியில் நடைபெற்று வரும் மேற்படி அரசு கட்டிடங்களின் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று திடீரென வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் கான்ட்ராக்டர்களை அழைத்து மேற்படி கட்டிடங்களின் பணிகளை எதற்காக மந்தகதியில் செய்து வருகின்றீர்கள். மேற்படி பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பழைய கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் தற்போது, இயங்கி வரும் வண்டலூர் உட்கோட்ட போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்திலும் சென்று பார்வையிட்டும் ஆய்வு செய்தார். அப்போது, வண்டலூர் தாசில்தார் ராஜேந்திரன், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையாளர் தாமோதரன், நகர மன்ற துணை தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் உட்பட பலர் உடனிருந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post அரசு கட்டிட பணிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Guduvanchery ,Nandivaram-Guduvanchery Municipality ,Chengalpattu District ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்...