×

ராகுல் போகிறார்… லட்சுமணன் வருகிறார்…: பிசிசிஐ திட்டம்

மும்பை: உலக கோப்பை தொடரில் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்ற இந்திய அணி வீரர்களையும், அதன் பயிற்சியாளர் ராகுலையும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசி), ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கொண்டாடினர். ஆனால் இறுதி ஆட்டத்தில் தோற்றதும் நிலைமை மாறி விட்டது. கூடவே தலைமை பயிற்சியாளரையும் மாற்றப் போகிறார்கள் என்ற தகவல் நேற்று வேகமாக பரவியது. இந்த உலக கோப்பையுடன் ராகுல் திராவிட் பதவிக் காலம் முடிவுக்கு வந்து விட்டது. தொடர் வெற்றிகள் மூலம் அசத்தினாலும், பைனலாக பெற்ற தோல்வியை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த பைனல் மட்டுமல்ல, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலிலும் இந்தியா தோற்றது. ராகுலுக்கு பைனலுக்கும் ராசியில்லை என்று கண்டுபிடித்துள்ளனர். எனவே பயிற்சியாளர் மாற்றம் குறித்து பேச்சு ஆரம்பித்து விட்டது. பதவியில் தொடருவது குறித்து ராகுலும் ஏதும் சொல்லவில்லை. அதனால் பயிற்சியாளராக தொடர அவருக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.

பிசிசிஐயும் அதைதான் விரும்புவதாக தெரிகிறது. அதனால் புதிய பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணனை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராகுல் 2021முதல் பயிற்சியாளராக இருந்தார். ஆனால் இடையில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர், ஆசிய விளையாட்டுப் போட்டி என பல்வேறு தொடர்களில் இந்திய அணியின் பயிற்சியாளராக லட்சுமணன் தான் இருந்துள்ளார். இப்போது நடைபெறும் ஆஸிக்கு எதிரான டி20 தொடருக்கும் லட்சுமணன்தான் பயிற்சியாளர். அடுத்து தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணிக்கும் அவர் பயிற்சியாளராக செல்ல உள்ளார். அதனால் லட்சுமணன் புதிய தலைமை பயிற்சியாளராகப் போவது உறுதி. அப்படி நடந்தால் லட்சுமணனுக்கு பதிலாக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ராகுல் மீண்டும் பொறுப்பு ஏற்பார்.

 

The post ராகுல் போகிறார்… லட்சுமணன் வருகிறார்…: பிசிசிஐ திட்டம் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Lakshmana ,BCCI ,Mumbai ,World Cup ,Dinakaran ,
× RELATED மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்...