×

உத்தராகண்ட் ஜிம் கார்பெட் சரணாலயத்தில் புலி தாக்கி ஊழியர் உயிரிழப்பு..!!

உத்தராகண்ட்: உத்தராகண்ட்டில் உள்ள ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயத்தில் வாகனத்தில் அழைத்து சென்று புலிகளை காட்டும் ஊழியர் அங்குள்ள புலி ஒன்று தாக்கி உயிரிழந்தார். உத்தராகண்ட் மாநிலத்தில் டிக்காலா என்ற பகுதி மிகவும் பிரபலமானது. ஒருபக்கம் அடர்ந்த வனப்பகுதி, மறுபக்கம் ஆறும் உள்ளது. 3வது பகுதியில் சுற்றுலா பயணிகளுக்காக கார்ட்டேஜஸ் என்று சொல்லக்கூடிய விடுதிகள் மற்றும் டூரிஸ்ட் ஹப் உள்ளிட்ட முக்கிய இடங்களும் அமைந்துள்ளது. இத்தகைய பூங்காவிற்கு குளிர்காலத்தில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தருவர் .

இங்கு சுற்றுலா பயணிகள் தங்கி வனப்பகுதிக்கு சென்று வனவிலங்குகளை பார்வையிடும் படியும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஜீப்புகளில் திறந்த வெளியில் பொதுமக்கள் சென்று வனவிலங்குகளை பார்ப்பதும் வனப்பகுதியில் யானை மீது சவாரியாக செல்வதும் வழக்கம். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜிம் கார்பெட் சரணாலயத்தில் நேபாளத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் புலி தாக்கி உயிரிழந்தார்.

இந்நிலையில் ஜிம் கார்பெட் சரணாலயம் நவம்பர் 15ம் தேதி சுற்றுலாப்பயணிகளுக்காக திறக்கப்பட்டது.
அதன்படி சுற்றுலாப்பயணிகள் இன்று ஜங்குள் சஃபாரி என்று சொல்லப்படும் காட்டு வனப்பகுதியை சுற்றி பார்வையிட்டு திரும்பி வந்து இறங்கிய சமயத்தில் திடீரென புலி ஒன்று அங்கு பணி செய்யும் ராமு காகா (60) ஊழியரை தாக்கி அவரை இழுத்து சென்றது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்ட சுற்றுலா பயணிகள் அச்சம் உறைந்தனர்.

பின்னர் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சுற்றுலா பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படக்கூடாது அவர்களை மீட்டு பத்திரமாக வெளியேற்ற வேண்டும் திட்டமிட்டனர். வனத்துறை நடத்திய விசாரணையில், இத்தகைய புலி தாக்கும் சம்பவங்கள் நடப்பதால் மேனிடர் என்று சொல்லக்கூடிய மனிதர்களை கொள்ளகூடிய புலியாக மாறியிருக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது. அது ஒரு ஆண் புலி என்றும் மிகவும் ஆக்ரோஷமாக பாய்ந்து தாக்குதல் நடத்தியது எனவும் அதை நேரில் பார்த்த சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். இத்தகைய சூழ்நிலையில் சுற்றுலா பயணிகளை ஜங்கள் சஃபாரி என்று வனத்தை சுற்றி பார்க்கும் பொழுதுபோக்குக்காக அழைத்து செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

The post உத்தராகண்ட் ஜிம் கார்பெட் சரணாலயத்தில் புலி தாக்கி ஊழியர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Jim Corbett Sanctuary ,Uttarakhand ,Jim Corbett ,Tiger ,Sanctuary ,Dinakaran ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ