×

பேருந்து சேவையை விரைவில் தொடங்கும் ஊபர் நிறுவனம்: மார்ச் மாதத்திற்குள் 60 குளிர்சாதன பேருந்து மூலம் சோதனை முயற்சி

வாஷிங்டன்: மற்றும் ஆட்டோ பயணிகளுக்கான சேவையில் ஈடுபட்டு வரும் ஊபர் நிறுவனம் பேருந்து சேவையை தொடங்கவுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்ட ஊபர் நிறுவனம் கார் மற்றும் ஆட்டோ வாகன சேவையை வழங்கிவரும் நிலையில் மென்பொருள் நிறுவனம் தொழிற்சாலை மற்றும் அலுவலகம் செல்பவர்களை கவரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 60 குளிர்சாதன பேருந்துகள் மூலம் சோதனை முயற்சி செய்யவுள்ளது. வாடிக்கையாளர்களின் வீடு மற்றும் அலுவலகம் இடையே அன்றாட சேவை வழங்கப்படவுள்ளது. இதற்காக 2025ஆம் ஆண்டில் ஒரு கோடி டாலர்களை ஊபர் கொல்கத்தாவில் முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாகும் எனக் கூறப்படுகிறது. பேருந்து சேவைகளுக்காக மாநில போக்குவரத்துத் துறையுடன் ஊபர் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

The post பேருந்து சேவையை விரைவில் தொடங்கும் ஊபர் நிறுவனம்: மார்ச் மாதத்திற்குள் 60 குளிர்சாதன பேருந்து மூலம் சோதனை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Uber ,WASHINGTON ,America ,San Francisco ,Dinakaran ,
× RELATED உபெர் கோப்பை பேட்மின்டன்: கால் இறுதியில் இந்தியா