×

ராஜீவ் காந்தி சாலை – இந்திரா நகரை இணைக்கும் சென்னையின் முதல் ‘U’ வடிவ மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

சென்னை: ஓஎம்ஆர் சாலையில் ரூ.108 கோடி மதிப்பிலான இந்திரா நகர் சந்திப்பு ‘U’ வடிவ மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ராஜிவ் காந்தி சாலை மற்றும் ஈசிஆர் சாலையை இணைக்கும் டைடல் பார்க் சிக்னல் சந்திப்பு மற்றும் இந்திரா நகர் சிக்னல் சந்திப்பை கடக்க குறைந்தபட்சம் சாதாரண நேரங்களில் 20 நிமிடம் வரை ஆகிறது. அதே நேரத்தில் பீக் அவர்சில் 30 நிமிடம் முதல் 40 நிமிடங்கள் வரை ஆகிறது. இந்தச்சாலையில் போக்குவரத்து நெரிசலைக்குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கிடையே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தி டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்ட பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே U வடிவில் ரூ.108 கோடியில் மேம்பாலம் அமைக்க 2019 ஜூலை மாதம் அரசு அறிவித்தது. நவம்பர் மாதத்தில் ரூ.108.13 கோடி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. 2020ல் பணிகள் தொடங்கப்பட்டது.

இந்திரா நகர் சந்திப்பு மேம்பாலம் 12.5 மீட்டர் நீளமுள்ள 19 தூண்களை கொண்ட மேம்பாலம் ஆகும். இருபுறமும் 120 மீட்டர் நீள அணுகு சாலை அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து சோதனை ஓட்டமும் நிறைவடைந்தது. சோழிங்கநல்லூர் திசையில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்கள் டைடல் பார்க் சந்திப்பில் போக்குவரத்து சிக்னலுக்காக காத்திருக்காமல் இந்திராநகர் மேம்பாலம் வழியாக ஏறி U டர்ன் செய்து, இந்திராநகர், அடையாறு மற்றும் திருவான்மியூர் செல்ல இயலும்.

டைடல் பார்க் சந்திப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் 12.5 மீட்டர் நீளமுள்ள 16 தூண்கள் கொண்ட மேம்பாலம் ஆகும். இந்த பாலத்தினை ஒட்டி ராஜீவ் காந்தி சாலையின் இருபுறமும் 90 மீட்டர் நீள அணுகு சாலையும், தரமணி சிஎஸ்ஐஆர் சாலையில் 140 மீட்டர் நீள அணுகு சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது கட்டுமான பணிகள் நிறைவுற்றுள்ளது. சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஓஎம்ஆர் சாலையில் இந்திரா நகர் சந்திப்பில் U வடிவ மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

The post ராஜீவ் காந்தி சாலை – இந்திரா நகரை இணைக்கும் சென்னையின் முதல் ‘U’ வடிவ மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rajiv Gandhi Road ,Indra City ,Chief Minister ,K. Stalin ,MLA ,Indira Nagar ,OMR Road ,Indra Nagar ,
× RELATED உருட்டுக்கட்டையால் பொதுமக்களை...