×

12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை கள்ளழகர் கோயில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம்..!!

மதுரை: மதுரை கள்ளழகர் கோயில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. மதுரையின் அடையாளமான சித்திரைத் திருவிழாவின்போது அழகர் வைகை ஆற்றில் இறங்குவார். அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் என மாறியது. தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கள்ளழகர் கோவில். கடந்த 2011ம் ஆண்டு இங்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, மதுரை கள்ளழகர் கோயில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷம் விண்ணை பிளக்க இந்த கும்பாபிஷேக வைபவம் நடைபெற்றது.

7 நிலைகளை கொண்ட இந்த ராஜகோபுரம் வர்ணங்கள் பூசப்பட்டு ஜொலிக்கிறது. ஆறரை அடி உயரம் கொண்ட 7 கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன. யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் ராஜகோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், அனைவரும் விழாவை காண தடுப்புகள் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18-ம் படி கருப்பண்ண சுவாமி கோயில் ராஜகோபுரம் குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கள்ளழகர் கோவில், ராஜகோபுரம், 18-ம் படிகளுக்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த ராஜகோபுரம் 628 சிற்பங்களை தாங்கி பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.

120 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தில் ரூ.2 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடுக்காய், சுண்ணாம்பு, பனங்கற்கண்டு ஆகிய பொருட்களை கொண்டு புனரமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து சற்றேறக்குறைய 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அழகர் மலை அழகர் மலையிலிருந்து வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் என்று அழைக்கக்கூடிய கள்ளழகர் கி.பி. 1558ம் ஆண்டு விஜயநகர பேரரசர் காலகட்டத்தில் திருக்கோவில் உருவாக்கப்பட்தாக கூறப்படுகிறது. அழகர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, மதுரை மாநகரமே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

The post 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை கள்ளழகர் கோயில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம்..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Kallaghar ,Temple ,Rajakopura Kumbapishekam Kolakalam ,Sami Darshan ,Madurai Kallaghar ,Rajakopura Kumbapishekam ,Madura ,Chitrit ,Vaigai River ,Kallaghar Temple Rajakopura Kumbapishekam Kolakalam ,
× RELATED அழகர்கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்