×

கிரிக்கெட்டையும் கெடுத்த பாஜக.. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தோற்றது பாஜகவின் அரசியல் தந்திரங்கள் : முரசொலி கண்டனம்!!

சென்னை : நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தோற்றது பாஜகவின் அரசியல் தந்திரங்கள் என திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கம் பின்வருமாறு..

உல­கக் கோப்­பையை இந்­திய கிரிக்­கெட் அணி­யால் இம்­முறை பெற முடி­ய­வில்லை. அத­னால் என்ன? இரண்டு முறை உல­கக் கோப்­பையை வென்ற நாடு இந்­தியா. இம்­முறை பெற முடி­யா­மல் போய்­விட்டது. அடுத்­த­முறை வெல்­லும். எனவே, இத்­தோடு அனைத்­தும் முடிந்து­வி­டப் போவது இல்லை. ஆனால் இப்­படி யோசித்­துப் பாருங்­கள்… உல­கக் கோப்­பையை இந்­திய அணி வென்­றி­ருந்­தால் என்ன நடந்­தி­ருக்­கும்? ஏதோ மொத்த ரன்­னை­யும் பிர­த­மர் நரேந்­திர மோடி தான் எடுத்­த­தைப் போலக் குதித்­தி­ருப்பார்கள்.

குஜ­ராத்­தில் நடந்­த­தால் இந்த வெற்றி –- நரேந்­திர மோடி மைதா­னத்­தில் நடந்­த­தால் இந்த வெற்றி –- மோடி பிர­த­ம­ராக இருப்­ப­தால் வெற்றி –- அவர் விளை­யாட்­டைப் பார்க்க வந்­த­தால் வெற்றி –- அமித்ஷா மகன் ஜெய்ஷா கிரிக்­கெட் போர்டு செய­லா­ள­ராக இருப்­ப­தால் வெற்றி -– என்று சொல்லி உயி­ரைக் கொடுத்து விளை­யா­டிய மொத்த வீரர்­க­ளை­யும் அவ­மா­னப்­ப­டுத்தி இருப்­பார்­கள்.

‘உல­கம் வென்ற மோடி –- உல­கக் கோப்­பையை வென்­றார்’ என்று சொல்லி இருப்­பார்­கள். இரண்டு ஆண்­டு­க­ளுக்கு வரும் 2ஜி மாநா­டு­க­ளின் தலை­மைப் பத­வி­யையே பெரிய சாத­னை­யைப் போலக் காட்டி ஓராண்டு முழுக்க -– அனைத்து மாநி­லங்­க­ளி­லும் விழா எடுத்­த­வர்­கள், உல­கக் கோப்­பை­யில் வென்­றால் விட்டு வைப்­பார்­களா? ‘2023 உல­கக் கோப்பை– -2024 மூன்­றா­வது முறை­யாக பிர­த­மர்’ என கற்­ப­னை­யில் மிதப்­பார்­கள். இவை எது­வும் நடக்­க­வில்லை. அத­னால்­தான் கிரிக்­கெட் தோல்வி கூட, வாழ்க்­கைத் தோல்­வி­யாக உரு­வ­கப்­ப­டுத்­தப்படு­கி­றது.

உல­கக் கோப்பை கிரிக்­கெட் விளை­யாட்­டுப் போட்­டியை வைத்து அர­சி­யல் செய்ய நினைத்­தது பா.ஜ.க. இறு­திப் போட்­டியை நடத்த புகழ்­பெற்ற மும்பை வான்­கடே மைதா­னம், கொல்­கத்தா ஈடன் கார்­டன் மைதா­னம், டெல்லி மைதா­னம் ஆகி­யவை இருக்­கி­றது. இவை அனைத்­தை­யும் விட்டு விட்டு அக­ம­தா­பாத் அழைத்­துச் சென்­றார்­கள். பிர­த­ம­ரின் மாநி­லத்­தில், பிர­த­மர் பெய­ரால் அமைந்த மைதா­னத்­தில் நடந்­தப்­பட்டு இந்­தியா வெற்றி பெற்­றால் ‘மோடியே வெற்றி பெற்­ற­தாக அர்த்­தம்’ என காட்ட நினைத்­தார்­கள்.

அந்த மைதா­னம் உல­கக் கோப்பை விளை­யாட்டு நடக்­கு­ம­ள­வுக்கு இன்­னும் முழு­மை­யா­கத் தயார் ஆக­வில்லை. இறு­திப் போட்டி நடத்­தப்­படும் மைதா­ன­மா­னது, கிரிக்­கெட் விளை­யாட்­டுக்கு நன்கு பழக்­கப்­பட்டிருக்க வேண்­டும். ஆனால் அக­ம­தா­பாத் மைதா­னத்­திலோ வெறும் 32 போட்­டி­கள் மட்­டுமே நடத்­தப்­பட்­டுள்­ளது. அங்கே விளை­யா­டி­யாக வேண்­டிய நெருக்­க­டியை உரு­வாக்­கி­னார்­கள். இதே­போல், இறு­திப் போட்­டிக்கு முன்பு போர் விமா­னங்­கள் சாகச நிகழ்ச்சி, டிரோன்­கள் மூலம் ஒளி வடி­வம், கலை நிகழ்ச்சி ஆகி­யவை நடத்­தப்­பட்­ட­தும் இந்­திய வீரர்­களுக்­குத் தேவை­யில்­லாத அழுத்­தத்­தைக் கொடுத்­து­விட்­டது என்­றும் சொல்­லப்­ப­டு­கி­றது.

இறு­திப் போட்­டி­யைக் காண பிர­த­மர் மோடி நேரில் வந்­த­தால், அவரைமகிழ்­விக்க கிரிக்­கெட் வாரி­ய­மும், குஜ­ராத் பா.ஜ.க. அர­சும் செய்த பல்­வேறுஏற்­பா­டு­க­ளால் கவன திசை திருப்­பல்­கள் அதி­கம் நடத்­தப்­பட்­டன. இந்­தியா, ஆஸ்­தி­ரே­லியா உல­கக் கோப்பை இறு­திப் போட்­டிக்கு முன்பு, உல­கக் கோப்­பையை ராம­ருக்கு மோடி அர்ப்­ப­ணிக்­கும் வகை­யில் புகைப்­ப­டம் வெளி­யா­கி­யி­ருந்­தது.

நீல நிற உடையே இந்­திய வீரர்­க­ளது அடை­யா­ளம். ஆனால் பயிற்­சி­யின் போது காவி நிற பனி­யன்­களை அணி­யக் கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டார்­கள். இதனை அர­சி­யல் தலை­வர்­கள் கண்­டித்து கருத்­து­களை வெளி­யிட்­டார்­கள். மேற்­கு­வங்க மாநி­லம் மத்­திய கொல்­கத்­தா­வில் நடந்த ஜக­தாத்ரி பூஜை­யில் கலந்து கொண்ட அம்­மா­நில முதல்­வர் மம்தா பானர்ஜி பேசு­கை­யில்,“ஒன்­றிய பா.ஜ.க. அரசு, நாடு முழு­வ­தும் காவி வர்­ணம் பூச முயற்­சிக்­கி­றது. இந்­திய கிரிக்­கெட் அணி­யின் ஜெர்­சி­யின் (வீரர்­க­ளின் உடை) நிறத்தை மாற்­றி­யது ஒரு அர­சி­யல் நட­வ­டிக்­கை­யா­கப் பார்க்­கிறேன். விளை­யாட்டை காவி நிற­மாக்க ஒன்­றிய அரசு முயற்­சிக்­கி­றது. இந்­திய கிரிக்­கெட் வீரர்­களை நினைத்­துப் பெரு­மை­ய­டை­கி­றோம். அவர்­கள் உல­கக் கோப்­பை­யில் வெற்றி பெறு­வார்­கள் என்று நம்­பு­கி­றேன். வீரர்­க­ளுக்கு ஜெர்சி நிறத்தை மாற்­றி­யது போன்று, மெட்ரோ ரயில் நிலை­யங்­க­ளுக்கு காவி வர்­ணத்தை பூசி­யுள்­ளார்­கள்” என்­றார் மேற்கு வங்க முத­ல­மைச்­சர் மம்தா பானர்ஜி.

கிரிக்­கெட் விளை­யாட்டு வீரர்­க­ளின் வெற்­றியை தங்­க­ளது வெற்­றி­யா­கக் காட்ட பா.ஜ.க. நினைப்­பது பொது­வெ­ளி­யில் அம்­ப­லம் ஆனது. சிவ­சே­னைக் கட்­சி­யின் (உத்­தவ் தாக்­கரே பிரிவு) மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் சஞ்­சய் ராவத் கூறும்­போது, “நரேந்­திர மோடி பந்­து­வீசி, அமித் ஷா பேட்­டிங் செய்­வ­தைப் போல உல­கக்­கோப்பை இறு­திப்­போட்­டியை ஒரு காவி கட்­சி­யின் நிகழ்வு போன்ற போலித் தோற்­றத்தை ஏற்­படுத்தி ரு­கின்­ற­னர் பா.ஜ.க.வினர். கிரிக்­கெட் விளை­யாட்­டில் அர­சி­ய­லைக் கொண்டுவர­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. ஆனால் அக­ம­தா பாத்­தில் நடை­பெ­றும்போட்­டி­யில் அர­சி­யல் கலக்­கப்­ப­டு­கி­றது. பிர­த­மர் மோடி கலந்­து­கொண்­ட­தால்­தான் இந்­தியா உல­கக்­கோப்­பையை வென்­றது என பா.ஜ.க.வினர் கூறு­வ­தற்­கும் வாய்ப்­புள்­ளது. அவர்­கள் அப்­ப­டிக் கூறி­னா­லும் எனக்கு ஆச்­ச­ரி­ய­மில்லை. இந்த நாட்­டில் எது வேண்­டு­மா­னா­லும் நடக்­க­லாம்.” என்று சொன்­னார். இவை அனைத்­தும் உண்­மை­யில் நடக்க இருந்­த­வை­தான்.

“ஆளும் பார­திய ஜனதா கட்சி ‘அர­சி­யல் நிகழ்வை’ நடத்த விரும்­பி­ய­தால், கிரிக்­கெட் விளை­யாட்­டில் நாட்­டின்பாரம்­ப­ரிய அதி­கார மைய­மாக இருந்த மும்­பை­யி­லி­ருந்து குஜ­ராத்­தில் உள்ள அக­ம­தா­பாத்­திற்கு மாற்­றி­யது” என்­றும் அவர் சொன்­னார். அந்த வகை­யில் தனது நரேந்­திர மோடி ஸ்டேடி­யத்­தில் தோற்­றது இந்­திய வீரர்­கள் அல்ல. பா.ஜ.க.வின் அர­சி­யல் தந்­தி­ரங்­கள்­தான் தோற்­றுள்­ளது. விளை­யாட்­டுப் போட்­டியை அர­சி­ய­லாக ஆக்க நினைத்த பா.ஜ.க. தோற்­றி­ருக்­கி­றது. அதன் தொடர் தோல்­வி­யில் இது­வும் ஒன்று.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கிரிக்கெட்டையும் கெடுத்த பாஜக.. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தோற்றது பாஜகவின் அரசியல் தந்திரங்கள் : முரசொலி கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Narendra Modi Stadium ,Muracoli ,Chennai ,Murasoli ,Dimuka ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர்...