×

அம்பை அருகே வாலிபரை கல்லால் தாக்கியவர் கைது

அம்பை, நவ. 23: அம்பை அருகே வாலிபரை கல்லால் தாக்கி மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். அம்பை அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் பொத்தை சிவசக்தி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி(25). இவர் கடந்த 18ம் தேதி தனது வீட்டிற்கு பால்பண்ணை தெரு வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் அம்பை தெற்கு ரத வீதியைச் சேர்ந்த சிவா (26), அவரது நண்பர் ஆகியோர் சாலையின் குறுக்கே வழியை மறித்து பைக்கில் நின்று கொண்டிருந்தனர். இசக்கிபாண்டி, அவர்களிடம் சாலையின் குறுக்கே ஏன் நின்று கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவா மற்றும் அவரது நண்பர் ஆகியோர் சேர்ந்து இசக்கிபாண்டியை அவதூறாக பேசி கல்லால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த அவர், அம்பை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் எஸ்ஐ அக்னல்விஜய் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி சிவாவை கைது செய்தனர். தலைமறைவான அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

The post அம்பை அருகே வாலிபரை கல்லால் தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Ambai ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி