×

வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

நாமகிரிப்பேட்டை, நவ.23: நாமகிரிப்பேட்டை வட்டாரம், தொப்பப்பட்டியில் வேளாண் துறை சார்பில் நடந்து வரும் வேளாண் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து, கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ், வயலில் மாடு வளர்ப்பு, மண்புழு படுகை, தேனி வளர்ப்பு, சோளம் சாகுபடி மற்றும் பழக்கன்றுகள் நடவு உள்ளிட்ட விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அட்மா திட்டத்தின் கீழ், பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் இனக்கவர்ச்சி பொறி மற்றும் மஞ்சள் வண்ண அட்டை பொறிகள், செயல் விளக்கத்திடலை ஆய்வு மேற்கொண்டார். நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், ஊனந்தாங்கல் தொகுப்பில் 15.05 ஏக்கரில் தரிசு நில தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 700 அடியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, 13 புதிய மின்கம்பங்கள் கொண்டு செல்லப்பட்டு ₹2,42,170 மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்பட்டு, 776 எண்கள் செந்தூரா வகை மாங்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொகுப்பின் ஓரங்களில் 200 மகாகனி, 320 தேக்கு கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தொகுப்பில் ஊடுபயிராக நிலகடலை, சாமை மற்றும் மரவள்ளி சுமார் 11 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதை கலெக்டர் உமா பார்வையிட்டார். இந்த ஆய்வில், வேளாண் இணை இயக்குநர் துரைசாமி, உதவி இயக்குநர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Namakrippet ,Agriculture Department ,Thoppapatti ,Dinakaran ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...