×

தேசிய இயற்கை மருத்துவ தினம் கொண்டாட்டம்

பாலக்ேகாடு, நவ.23: பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 6வது தேசிய இயற்கை மருத்துவ தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இயற்கை மற்றும் யோகா வாழ்வியல் மருத்துவ சிகிச்சைகளான அக்குபஞ்சர், களிமண் குளியல், வாழை இலை குளியல், நீர் சிகிச்சை உண்ணா நோன்பு, உணவு சிகிச்சை போன்ற சிகிச்சைகளின் தேவைகள் மற்றும் பயன்களை பற்றி யோகா மற்றும் இயற்கை மருத்துவர் பிரித்திவிராஜ் எடுத்துரைத்தார். மாரண்டஅள்ளி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.சிவகுரு, மருத்துவ அலுவலர் டாக்டர்.திவ்யாகுமாரி மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post தேசிய இயற்கை மருத்துவ தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : National Naturopathic Medicine Day ,Balakekadu ,6th National Naturopathic Medicine Day ,Panchapalli Government Primary Health Center ,Palakodu ,Dinakaran ,
× RELATED இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க விருதுநகரில் சிறப்பு கள செயல்பாடு