×

நிழற்குடை அமைக்க கோரிக்கை

ரெட்டியார்சத்திரம், நவ. 23: ரெட்டியார்சத்திரம் அருகே தனியார் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. ரெட்டியார்சத்திரம் அருகே தனியார் கல்லூரி உள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கல்லூரி வாயிலில் பேருந்து நிறுத்தம் உள்ளது. ஆனால் நிழற்குடை இல்லாததால், பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவர்கள் கடும் வெயிலிலும், மழையிலும் நனையும் அவலம் உள்ளது. மாணவ, மாணவிகள் நலன் கருதி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்து தர நெடுஞ்சாலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post நிழற்குடை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Redyarchatram ,Rediyarshatram ,Dinakaran ,
× RELATED தார்ப்பாய் போடாமல் செல்லும் மணல் லாரிகளால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்