×

ஊட்டி மலை ரயில் 25ம் தேதி வரை ரத்து

மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பெய்த மழை காரணமாக மலை ரயில் பாதையில் கல்லாறு-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையில் ராட்சத பாறை உருண்டு விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது. மேலும், ரயில் பாதையில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டது.

இதனால் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. கோவை, நீலகிரியில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி வருகிற 25ம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

The post ஊட்டி மலை ரயில் 25ம் தேதி வரை ரத்து appeared first on Dinakaran.

Tags : Ooty Hill ,Mettupalayam ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...