×

சேலம் அரசு மருத்துவமனையில் பயங்கர தீ: அவசர சிகிச்சை பிரிவில் மூச்சுத்திணறல் ; 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிர்தப்பினர்

சேலம்: சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சைப்பிரிவில் மின்கசிவால் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் 50க்கும் மேற்பட்ட ேநாயாளிகள் காப்பாற்றப்பட்டனர்.

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சூப்பர் ஷ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருவதால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்ட மக்களுக்கு தலைமை மருத்துவமனையாக உள்ளது. இந்நிலையில் நேற்று காலை அவசர சிகிச்சை பிரிவு கட்டடிடத்தின் முதல் மாடியில் உள்ள உடல்காய தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் எலும்பு முறிவு வார்டில் உள்ள ஏசியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீப்பற்றி மளமளவென எரிந்துள்ளது. இதையடுத்து அந்தவார்டில் இருந்த நோயாளிகளும், உறவினர்களும், ஊழியர்களும் அலறியடித்து வெளியே ஓடினர். இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.

தகவலறிந்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் வருவதற்குள் அந்த வார்டு முழுவதும் தீப்பற்றி மளமளவென பரவியது. கடும் புகை சூழ்ந்ததால் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து விரைந்து வந்த செவ்வாய்பேட்டை மற்றும் சூரமங்கலம் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மருத்துவமனையின் ஐசியூ வார்டு முழுவதும் குளிரூட்டப்பட்ட அறையாக உள்ளதால் புகை வௌியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் வீரர்களின் துரித முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதே நேரத்தில் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவின் முதல் மாடி மற்றும் இரண்டாம் மாடி முழுவதும் கரும்புகை சூழந்து நின்றதால் பரபரப்பு மேலும் அதிகரித்தது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மருத்துவமனையில் உள்ள கண்ணாடிகளை உடைத்து புகை வௌியே செல்ல வழிவகை செய்தனர்.

அங்கு பணியில் இருந்த கிரிஷ்டல் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியோடு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை பாதுகாப்பாக வீல் சேர் மற்றும் ஸ்ட்ரெச்சர் மூலம் அவசர சிகிச்சை பிரிவின் மஞ்சள் பிரிவிற்கு கொண்டு வந்தனர். தகவலறிந்து அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட கலெக்டர் கார்மேகம், பார்த்திபன் எம்.பி, மருத்துவ கல்வி இயக்குநர் சங்குமணி ஆகியோர் விரைந்து வந்து, தீ விபத்து ஏற்பட்ட இடங்களைநேரு பார்வையிட்டு விபத்து ஏற்பட்டதற்கான காரணங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் கலெக்டர் கார்மேகம் நிருபர்களிடம் கூறுகையில், ‘அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள உடல் காய (ஐசியூ) வார்டு, எலும்பு முறிவு வார்டில் உள்ள ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து ஆராயப்படும். அவசர சிகிச்சைப் பிரிவின் உடல்காய பிரிவில் சிகிச்சை பெற்ற 5 நோயாளிகள் மற்றும் எலும்பு முறிவு வார்டில் இருந்த 50 நோயாளிகளை உடனடியாக அங்கிருந்து வௌியேற்றப்பட்டனர். இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக அங்கிருந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

ஏன் தீ விபத்து ஏற்பட்டது என்பது பற்றி பொதுப்பணித்துறையின் எலக்ட்ரிக்கல் மற்றும் சிவில் செயல் பொறியியல் அலுவலர்களை கொண்டு உடனடியாக சரிசெய்யப்படும்’ என்றார்.

விசாரணை நடத்த டாக்டர்கள் குழு
டீன் மணி கூறுகையில், “சேலம் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை நடத்த டாக்டர்கள் கொண்ட குழு அமைக்கப்படும். ேமலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏசியில் ஏற்பட்ட மின் பழுது காரணமா? அல்லது ேவறு காரணமா என்பது குறித்து விசாரணை முடிவில் தெரியவரும். தீ விபத்து ஏற்பட்டவுடன் உடனடியாக அனைவரையும் வௌியேற்றியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதே ேபால், அவசர சிகிச்சை பிரிவு சரி செய்யப்படும் வரை, பொதுமருத்துவ துறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்,’’ என்றார்.

The post சேலம் அரசு மருத்துவமனையில் பயங்கர தீ: அவசர சிகிச்சை பிரிவில் மூச்சுத்திணறல் ; 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிர்தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Salem ,Govt Hospital Fire ,Emergency Department ,Salem Government Medical College Hospital ,Salem Government Hospital ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை