×

விஜய் ஹசாரே கோப்பை இன்று தொடக்கம்

மும்பை: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. தலா 8 அணிகள் கொண்ட 3 பிரிவுகள் மற்றும் தலா 7 அணிகள் கொண்ட 2 பிரிவுகள் என 5 பிரிவுகளாக ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் சவுராஷ்டிரா இடம் பெற்றுள்ள ஏ பிரிவில் புதுச்சேரி, ரயில்வே, மும்பை, ஒடிஷா, திரிபுரா, சிக்கிம், கேரளா இடம் பெற்றுள்ளன. 5 முறை சாம்பியன் தமிழ்நாடு அணி இ பிரிவில் மத்திய பிரதேசம், நாகாலாந்து, பஞ்சாப், பரோடா, பெங்கால், கோவா அணிகளை சந்திக்கிறது. ஆட்டங்கள் அனைத்தும் காலை 9 மணிக்குத் தொடங்கும். மும்பை, தானே, பெங்களூரு, ஆலூர், ராஜ்கோட், அகமதாபாத், சண்டிகர், ஆனந்த், ஜெய்பூர் நகரங்களில் போட்டிகள் நடக்க உள்ளன. லீக் சுற்று டிச.5ம் தேதியுடன் முடிகிறது. டிச.11-14 காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களும், பைனல் ராஜ்கோட்டில் டிச.16ம் தேதியும் நடத்தப்படும். தமிழ்நாடு விளையாடும் முதல் ஆட்டம் நவ.25ல் நடக்கிறது.

தமிழ்நாடு அணி: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), பாபா இந்திரஜித், என்.ஜெகதீசன், சாய் சுதர்சன், பாபா அபராஜித், விஜய் ஷங்கர், ஷாருக்கான், வருண் சக்கரவர்த்தி, மணிமாறன் சித்தார்த், டி.நடராஜன், ரவி சாய்கிஷோர், சந்தீப் வாரியர், சோனு யாதவ், குல்தீப் சென், பிரதோஷ் ரஞ்சன் பால்.

தமிழ்நாடு அணி அட்டவணை
தேதி எதிரணி களம்
நவ.25 கோவா தானே
நவ.27 பெங்கால் மும்பை
நவ.29 பரோடா மும்பை
டிச.1 பஞ்சாப் மும்பை
டிச.3 மத்திய பிரதேசம் தானே
டிச.5 நாகாலாந்து மும்பை

The post விஜய் ஹசாரே கோப்பை இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Vijay Hazare Trophy ,Mumbai ,Vijay Hazare Cup ODI ,Vijay Hazare Cup ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!