×

புதிய வகை மியூசிக் தவளை இனம் கண்டுபிடிப்பு

இடாநகர்: அருணாசலப்பிரதேசத்தில் உள்ள சாங்லாங் மற்றும் லோகித் மாவட்டங்களில் ஆராய்ச்சியாளர்கள் பிதுபன் பவுரா, தீபக் மற்றும் அபிஜித் தாஸ் ஆகியோர் தவளைகள் குறித்த கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது ஆழமற்ற நீர்நிலைகளில் வலுவான உடலமைப்பு கொண்ட மற்றும் சத்தமிடும் புதிய மியூசிக் ஆண் தவளைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த தவளை இனமானது நிதிரானா நோவா டிஹிங் என்று அழைக்கப்படுகின்றது. இந்த புதிய இனத்திற்கு நோவா டிஹிங் நதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆண் தவளைகள் சுமார் 1.8 அங்குலம் முதல் 2.3 அங்குலம் நீளம் கொண்டவை. இதேபோல் பெண் தவளைகள் 2.4 அங்குலம் முதல் 2.6அங்குலம் நீளம் கொண்டவையாகும்.

The post புதிய வகை மியூசிக் தவளை இனம் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Itanagar ,Bituban Paura ,Deepak ,Abhijit Das ,Changlong ,Lokit ,Arunachal Pradesh… ,
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...