×

திடீர் திருப்பம் நீக்கப்பட்ட ஆல்ட்மேன் ஓபன்ஏஐக்கு திரும்பினார்

சான் பிரான்சிஸ்கோ: பணிநீக்கம் செய்யப்பட்ட சிஇஓ ஆல்ட்மேன் திடீர் திருப்பமாக மீண்டும் ஓபன்ஏஐ நிறுவனத்தில் சேர்க்கப்பட்டார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேனை அந்நிறுவன இயக்குநர்கள் குழு கடந்த வெள்ளிக்கிழமை டிஸ்மிஸ் செய்தது. ஆல்ட்மேனை நீக்கியதற்கு இயக்குநர்கள் குழு உண்மையான காரணத்தை வெளிப்படையாக கூறவில்லை. இந்த நடவடிக்கையை தொடர்ந்து ஆல்ட்மேனுக்கு ஆதரவாக ஓபன்ஏஐ ஊழியர்கள் 770 பேர் களமிறங்கினர். அதே சமயம், ஓபன்ஏஐயின் மிகப்பெரிய முதலீட்டாளரான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் சத்ய நாதெள்ளா தனது புதிய ஏஐ டீமின் தலைமைப் பொறுப்பை ஆல்ட்மேனுக்கு வழங்க தயாராக இருப்பதாக அறிவித்தார். இது தவிர ஓபன்ஏஐக்கு நிறுவனத்திற்கு முதலீட்டாளர்களிடமிருந்து நெருக்கடிகள் வந்தன. இந்நிலையில், திடீர் திருப்பமாக சாம் ஆல்ட்மேன் மீண்டும் சிஇஓவாக நியமிக்கப்படுவதாகவும் புதிய இயக்குநர்கள் குழு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஓபன்ஏஐ நிறுவனம் நேற்று அறிவித்தது.

The post திடீர் திருப்பம் நீக்கப்பட்ட ஆல்ட்மேன் ஓபன்ஏஐக்கு திரும்பினார் appeared first on Dinakaran.

Tags : Altman ,OpenAI ,San Francisco ,CEO ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் பரபரப்பு நடுவானில்...