×

ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்த காங்கிரஸ் அரசை அகற்றுவது அவசியம்: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு

ஜெய்ப்பூர்: ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்த காங்கிரஸ் அரசை அகற்றுவது அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஜஹாஸ்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி; காங்கிரசின் அனைத்து பொய்யான வாக்குறுதிகளையும் விட இந்த மோடியின் உத்தரவாதம் மேலானது. காங்கிரசின் நம்பிக்கை எங்கே முடிகிறதோ, அங்கிருந்துதான் மோடியின் உத்தரவாதம் தொடங்குகிறது.

காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கோ, பழங்குடியினருக்கோ, ஏழைகளுக்கோ சொந்தமானது அல்ல; காங்கிரஸ் ஒரு குடும்பத்திற்கானது. ராஜஸ்தானில் தவறான ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசை மாற்ற ஜனநாயகம் உங்களுக்கு ஒரு வாய்ப்பளித்துள்ளது. இந்த வாய்ப்பை விட்டுவிடாதீர்கள். ஒன்றிய அரசின் திட்டங்களை விரைவாக செயல்படுத்த காங்கிரஸ் அரசை அகற்றுவது அவசியம். மக்களின் கனவே எனது தீர்மானங்கள், அதை நிறைவேற்ற தடைகளை நீக்குங்கள்.

மாவ்ஜி மகராஜின் ஆசிர்வாதத்துடன் நான் கணிக்கிறேன்; ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு அமையாது. காங்கிரஸின் நம்பிக்கை எங்கே முடிகிறதோ, அங்கிருந்து மோடியின் உத்தரவாதம் தொடங்குகிறது; காங்கிரஸ் அரசை மாற்ற ஜனநாயகம் உங்களுக்கு தந்துள்ள வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் இவ்வாறு கூறினார்.

The post ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்த காங்கிரஸ் அரசை அகற்றுவது அவசியம்: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Congress ,Union ,PM Modi ,Rajasthan ,Jaipur ,Modi ,Congress government ,Union Government ,EU government ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரசார் முற்றுகை போராட்டம்