×

திருவண்ணாமலை தீபத் திருவிழா; நாளை மறுநாள் முதல் ஆன்லைனில் அனுமதிச்சீட்டு: ஆட்சியர் அறிவிப்பு

தி.மலை: திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கான அனுமதிச் சீட்டுகள் நாளை மறுநாள் முதல் ஆன்லைன் மூலம் பெறலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; 26-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் தரிசனம் காண ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதிச் சீட்டுகள் விநியோகம். மாலை 6 மணிக்கு மகா தீபம் தரிசனம் காண ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும். மகா தீபம் தரிசனம் காண ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதிச் சீட்டுகளும் வழங்கப்படும். https://annamalaiyar.hrce.tn.gov.in – என்ற இணையதளத்தில் அனுமதிச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

* கட்டணச்சீட்டு பெற ஆதார் அட்டை, கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை.
ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும்.

* கட்டணச்சீட்டு பதிவு செய்தவுடன், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் எண் OTP குறுஞ்செய்தி பதிவு செய்தவரின் கைபேசி எண்ணிற்கு வரும்.

* கட்டணச்சீட்டு பதிவிற்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்டணச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

* ஆன்லைன் மூலம் டிக்கட் பதிவிறக்கம் செய்யப்பட்டு பரணி தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் 26.11.2023 அன்று அதிகாலை 02.00 மணி முதல் 03.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

* ஆன்லைன் மூலம் டிக்கட் பதிவிறக்கம் செய்யப்பட்டு மகா தீபம் தரிசனத்திற்கு வருகைதரும் பக்தர்கள் 26.11.2023 அன்று மாலை 02.00 முதல் 03.30 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

* மேற்கண்ட இரண்டு தீப நிகழ்வுகளை காணவரும் பக்தர்கள் அசல் கட்டணச்சீட்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு இத்திருக்கோயில் கிழக்கு ராஜ கோபுரம் (திட்டி வாயில்) வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.

* குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை தர தவறும் சேவார்த்திகளை கண்டிப்பாக அனுமதிக்க இயலாது.

* Online வழியாக கட்டணச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து வருகைதர இருக்கும் சேவார்த்திகள் மேலே குறிப்பிடப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி திருக்கோயிலுக்கு ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பிற ஏற்பாடுகள்
பக்தர்கள் தீபத்திருவிழா பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள வசதியாக Toll Free No. 1800 425 3657 στοότι βουπιε σाळा क्राप झा பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருக்கோயில்களில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள QR Code பலகையினை பயன்படுத்தி பக்தர்கள் நன்கொடைகளை Online மூலம் செலுத்தி அருள்மிகு அண்ணாமலையார் அருள்பெற வேண்டுகிறோம்.

மகா தீபத்திற்கு பிரார்த்தனை நெய் குடத்திற்கான காணிக்கை கட்டணத்தை இராஜகோபுரம் (கிழக்கு கோபுரம்) அருகில் உள்ள திட்டிவாயில் பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் திருமஞ்சன கோபுரம் (தெற்கு கோபுரம்) நுழைவு வாயில் ஆகிய இடங்களில் நெய்குடத்திற்கான காணிக்கை கட்டணச்சீட்டுகள் விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

26.11.2023 அன்று பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் பெரிய திரை வாயிலாக திருக்கோயில் வளாகத்திற்குள் 4 இடங்கள், திருக்கோயில் கோபுரங்கள் முன்பு, தற்காலிக பேருந்து நிலையங்கள். நகரின் முக்கிய இடங்களில் 20 இடங்கள் என மொத்தம் 24 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

திருக்கோயில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் இத்திருக்கோயிலின் https://www.youtube.com/@arunachaleswarar மூலம் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பக்தர்கள் நேரலையில் கண்டு மகிழலாம் எனவும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ். தெரிவித்துள்ளார்.

The post திருவண்ணாமலை தீபத் திருவிழா; நாளை மறுநாள் முதல் ஆன்லைனில் அனுமதிச்சீட்டு: ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Deepat Festival ,Ruler ,THIRUVANNAMALAI DEEP FESTIVAL ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...