×

நரிக்குறவர்களின் திருமண உதவித்தொகை உயர்வு

சென்னை: நரிக்குறவர்களின் திருமண உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: 2021-22ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின்போது, நரிக்குறவர் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ஆண்களுக்குரூ.2 ஆயிரத்தில் இருந்துரூ.3 ஆயிரமாகவும், பெண்களுக்குரூ.2 ஆயிரத்தில் இருந்துரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தப்படும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி, இவர்களுக்கான திருமண உதவித்தொகையை உயர்த்தி வழங்கி அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post நரிக்குறவர்களின் திருமண உதவித்தொகை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Backward, ,Very Backward ,Minority Welfare Department ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?