×

சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாடு பணிகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு


சேலம்: சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி மாநாடு பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுகவின் இளைஞரணி 2வது மாநில மாநாடு டிசம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாநாடு திடல், பந்தல், மேடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. திமுக இளைஞரணி மாநில செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை மாநாட்டு பணிகளை ஆய்வு செய்தார்.

மாநாட்டு திடல் அமைக்கும் பணிகளை சுமார் ஒரு கிலோ தூரம் நடந்து சென்று அவர் பார்வையிட்டார். இதையடுத்து மாநாட்டு திடலின் மாதிரி வரைபடங்களை ஆய்வு செய்த அவர், மாநாட்டிற்கு தொண்டர்கள், தலைவர்கள் வரும் வழிகள், கழிப்பறை வசதி, வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். முன்னதாக மாநாட்டிற்கு வரும்போது, வாழப்பாடியில் தங்க உள்ள வீட்டினையும் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெரியகருப்பன், மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், ராஜேந்திரன் எம்எல்ஏ, டி.எம்.செல்வகணபதி, எம்பிக்கள் சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன், கள்ளக்குறிச்சி பொன் கௌதமசிகாமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டாக்டர் வீரபாண்டி பிரபு உள்பட பலர் இருந்தனர்.

The post சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாடு பணிகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : DMK Youth Conference ,Salem ,Minister ,Udayanidhi Stalin ,Pethanayakkanpalayam ,Dinakaran ,
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...