×

டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்க கூடாது: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை

சென்னை: அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை / விநியோகம் செய்வது மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள் 1945 இன் படி குற்றமாகும்.

தமிழக மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை நிறுவனங்களில் தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள் 1945 இன் கீழ் விதிமீறல்களில் ஈடுபட்ட மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள் மீது கடந்த ஆறு மாதங்களில் 117 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை / விநியோகம் செய்த 6 மருந்து விற்பனை உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் இத்துறை மூலம் இனி வருங்காலங்களிலும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை / விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மீது மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள் 1945 இன் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்க கூடாது: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Department of Medicine ,Public Health ,CHENNAI ,
× RELATED பொது சுகாதாரத்துறை தகவல்...