×

ஆவின் டிலைட் பால் விற்பனையை ஊக்குவிக்க முடிவு: அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

சென்னை: ஆவின் பச்சை நிற பாக்கெட் பாலை ஊக்குவிப்பதற்கு பதிலாக ஊதா நிற பால் பக்கெட் விற்பனையை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டை பொறுத்தவரை பசும்பாலில் கூடுதலாக 1% கொழுப்பு சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது. கூடுதலாக கொழுப்பு சேர்ப்பது அறிவியல்பூர்வமாக இன்றைய வாழ்க்கை தரத்துக்கு தேவையற்ற ஒன்றாகும். பல வாடிக்கையாளர்கள் கூடுதலாக கொழுப்பு அல்லது புரதம் உள்ளிட்ட திடப்பொருட்கள் சேர்ப்பதை விரும்பவில்லை. வாடிக்கையாளர்கள் விரும்பாததால் ஊதா நிற டிலைட் பாலை முன்னிலைப்படுத்தி வருகிறோம் என அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

The post ஆவின் டிலைட் பால் விற்பனையை ஊக்குவிக்க முடிவு: அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Aa ,Minister ,Mano Thangaraj ,Chennai ,
× RELATED வெகுஜன விரோதியாக உலக மக்களால்...