×

தொடர்ந்து வெள்ளப்பெருக்கு: கும்பக்கரை அருவியில் குளிக்க 20 வது நாளாக தடை விதிப்பு


பெரியகுளம்: பெரியகுளம் அருகே, கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், 20வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. னி மாவட்டம், பெரியகுளம் அருகே பிரசித்தி பெற்ற கும்பக்கரை அருவி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை, வட்டக்கானல் மற்றும் வெள்ளக்கெவி ஆகிய பகுதிகளில், மழை பெய்யும்போது, இந்த அருவிக்கு நீர்வரத்து ஏற்படும். சுற்றுலாத் தலமான இந்த அருவிக்கு, தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களைச சேர்ந்த சுற்றுலப் பயணிகளும் வந்து குளித்து மகிழ்வர்.

இந்தநிலையில், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்றும் கனமழை பெய்தது. இதனால், அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.

The post தொடர்ந்து வெள்ளப்பெருக்கு: கும்பக்கரை அருவியில் குளிக்க 20 வது நாளாக தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Kumbakarai ,Dinakaran ,
× RELATED கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரையில் குவியும் பயணிகள்