×

முத்துப்பேட்டை தர்காவில் நாளை சந்தனக்கூடு ஊர்வலம்


முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள ஷேக்தாவூது ஆண்டவர் தர்கா உலக புகழ்பெற்றதாகும். இந்த தர்காவின் 722வது வருட பெரிய கந்தூரி விழா கடந்த 14ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நாளை நடைபெறுகிறது. நள்ளிரவு 2 மணிக்கு தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாகிப் தலைமையில், டிரஸ்டிகள் புனித சந்தன குடம் தலையில் சுமந்து வந்து கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டில் வைக்கின்றனர். இதன்பின்னர் 2.30 மணிக்கு தர்காவில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் துவங்குகிறது. ஊர்வலம் ஆற்றங்கரை பாவா தர்கா, அம்மா தர்கா பகுதிக்கு சென்று மீண்டும் தர்காவை 3 முறை சுற்றி வந்தடையும்.

இதன்பின்னர் அதிகாலை 5 மணிக்கு ஷேக்தாவூது ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசப்படும். ன்னதாக சந்தனக்கூடு தயார் செய்யும் பணியில் கடந்த சில தினங்களாக அதிராம்பட்டினத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மறுநாள் மாலை 4.30 மணிக்கு உள்ளூர் மக்களுக்காக அந்தி கூடு ஊர்வலம் நடைபெறுகிறது. 27ம் தேதி புனித கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா நிறைவு பெறுகிறது. சந்தன கூடு விழாவை முன்னிட்டு நாளை மற்றும் மறுநாள் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

The post முத்துப்பேட்டை தர்காவில் நாளை சந்தனக்கூடு ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Sandalwood procession ,Muthuppet ,Shektavudu Andavar Dargah ,Muthupet ,Thiruvarur district ,dargah ,
× RELATED முத்துப்பேட்டையில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தீவிரம்