×

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் நியமனம்

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் நவம்பர் 21 புதன்கிழமை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் வழிகாட்டியாக இருந்து தனது பதவியை விட்டு வெளியேறினார்.

தற்போது அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கம்பீர் தெரிவித்துள்ளதாவது; “நான் உணர்ச்சிவசப்பட்ட நபர் அல்ல, இது எல்லாம் தொடங்கிய இடத்திற்குத் திரும்பியுள்ளது. நான் KKR க்கு மட்டும் திரும்பி வரவில்லை, நான் மகிழ்ச்சி நகரத்திற்கு திரும்பி வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் தெரிவித்துள்ளதாவது; “கௌதம் எப்போதுமே குடும்பத்தின் ஒரு அங்கமாக இருக்கிறார், எங்கள் கேப்டன் வேறு ஒரு அவதாரத்தில் ‘வழிகாட்டியாக’ வீடு திரும்புகிறார். இப்போது நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்டுடன் கைகோர்ப்பார்” என தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அண இரண்டு முறை பட்டத்தை வென்றது, ஐந்து முறை பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்றது மற்றும் 2014இல் சாம்பியன்ஸ் லீக் T20 இன் இறுதிப் போட்டியை எட்டியது.

The post கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Gautam Kambir ,Kolkata Knight Riders ,Kolkata ,Dinakaran ,
× RELATED சூப்பர் மேன் சுனில் நரைன்! ஷாருக் பாராட்டு