×

போதைப் பொருட்கள் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திடவும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகப்படுத்திடவும், போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும் அதை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் போதை ஒழிப்பு -தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மேலும், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆகியவற்றை இணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள “அமலாக்கப் பணியகம் – குற்றப் புலணாய்வு துறை” என்ற புதிய பிரிவை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் போதைப் பொருட்கள் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. மற்றும் காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

The post போதைப் பொருட்கள் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.! appeared first on Dinakaran.

Tags : Consultative Meeting on Drug Prevention ,Chief Minister ,H.E. K. ,Stalin ,Chennai ,K. ,Prevention ,MLA K. ,
× RELATED மணீஷ் சிசோடியா பொய் வழக்கில் கைது...