×

காங். முன்னாள் எம்எல்ஏ விநாயகமூர்த்தி மறைவு: முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

சென்னை: காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ விநாயகமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பெரியவர் எஸ்.ஜி.விநாயகமூர்த்தி தனது 92வது வயதில் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கே.எஸ்.அழகிரி (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ்): காங்கிரஸ் இயக்கப் பணியில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட விநாயகமூர்த்தி மறைவு காங்கிரஸ் இயக்கத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ஜி.கே.வாசன் (தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்): தமிழக மக்கள் நலன், தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றிற்காக அர்ப்பணிப்போடு செயல்பட்ட விநாயகமூர்த்தியின் மறைவு தமிழக அரசியலுக்கும், தமிழ்நாட்டிற்கும் இழப்பாகும்….

The post காங். முன்னாள் எம்எல்ஏ விநாயகமூர்த்தி மறைவு: முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Kong ,MLA ,Vinayakamurthy ,Chief Minister ,Chennai ,Congress ,Tamil Nadu ,
× RELATED ஜெயக்குமார் மரணத்தில் நிறைய...