×

சுற்றுலா துறையை மேம்படுத்த இலங்கை, தாய்லாந்தை தொடர்ந்து விசா இல்லாமல் இந்தியர்களை அனுமதிக்க வியட்நாம் அரசு முடிவு!!

வியட்நாம் : இலங்கை மற்றும் தாய்லாந்திற்கு அடுத்தபடியாக இந்தியர்களை விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கும் 3வது நாடாக வியட்நாம் மாற உள்ளது. அண்மையில் இலங்கை அரசு தங்கள் நாட்டுக்கு அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்பபதற்காக இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு ஐந்து மாதங்களுக்கு இலவச விசா வழங்கப்படும் அறிவித்தது. மேலும், 2024 மார்ச் 31ம் தேதி வரை இது சோதனை முயற்சியாக அமல்படுத்தப்படுகிறது என்று அந்நாடு அறிவித்தது.

அதே போல், தாய்லாந்து சுற்றுலா துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023 நவம்பர் 10 முதல் 2024 மே 10ம் தேதி வரை தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. தாய்லாந்து வரும் இந்தியர்கள் 30 நாட்கள் விசா இல்லாமல் தங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விசா இலலாமல் இந்தியர்களை வியட்நாமிற்குள் அனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. ஜேர்மனி, பிரான்ஸ், சுவீடன், இத்தாலி ,ஸ்பெயின், டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தற்போது விசா இல்லாமல் சுற்றுலாவிற்கு புகழ்பெற்ற வியட்நாமிற்கு பயணம் செய்யலாம்.

அந்த வகையில், சுற்றுலா துறையை மேம்படுத்தும் விதமாக இந்தியா மற்றும் சீன குடிமக்களையும் விசா இல்லாமல் நாட்டிற்குள் அனுமதிக்க வியட்நாம் அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அந்நாட்டு அரசு விரைவில் வெளியிட உள்ளது. இதையடுத்து இ2023ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் வியட்நாம் சுமார் 10 மில்லியன் சர்வதேச பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 4.6 மடங்கு அதிகமாகும் மற்றும் இந்த ஆண்டுக்கான இலக்கையும் விஞ்சியது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத மத்தியில், அனைத்து நாடுகளை சேர்ந்த தனிநபர்களுக்கும் இ விசாக்களை வழங்க தொடங்கியது. இது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த காலத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் வியாட்நாமுக்கு அவர்கள் வந்து செல்ல அனுமதிக்கிறது.

The post சுற்றுலா துறையை மேம்படுத்த இலங்கை, தாய்லாந்தை தொடர்ந்து விசா இல்லாமல் இந்தியர்களை அனுமதிக்க வியட்நாம் அரசு முடிவு!! appeared first on Dinakaran.

Tags : Government of Vietnam ,Indians ,Sri Lanka, Thailand ,Vietnam ,Sri Lanka ,Thailand ,Dinakaran ,
× RELATED கரூர் மாவட்டத்தில் எள் சாகுபடி 300 ஏக்கரை தாண்டியது