×

கும்பகோணம் மாநகர பகுதியில் ஆய்வு அரசு, தனியார் வாகனங்களில் ஏர்ஹாரன் அகற்றம்

 

கும்பகோணம், நவ.22: கும்பகோணம் மாநகர் பகுதியில் இயக்கப்படும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பொதுமக்களுக்கு இடையூறாக அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தியுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன. மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் பயணப்படும் பெரும்பாலான வாகனங்களில் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர்-சென்னை சண்முகசுந்தரம் அறிவுரையின்படி, வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை நேற்று காலை கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் திடீர் வாகன தணிக்கை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது அரசு மற்றும் தனியார் பேருந்துகளை சோதனை செய்தனர். ஆய்வில் நிறைய பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அதில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என 4 வாகனங்களுக்கு அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தியிருந்ததற்காக தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு, தலா ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்த பேருந்தின் சக்கரங்களில் வைத்து நொறுக்கப்பட்டது. சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அவர்களை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் பேருந்து ஓட்டுனர்களை எச்சரித்தனர்.

The post கும்பகோணம் மாநகர பகுதியில் ஆய்வு அரசு, தனியார் வாகனங்களில் ஏர்ஹாரன் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,
× RELATED சுற்றுலாத்துறை சார்பில் மலையாளப்பட்டியில் கிராமிய பொங்கல் விழா