×

பெங்களூரில் இருந்து தஞ்சாவூருக்கு வி.வி.பேட் கருவியில் பொருத்தப்படும் பேப்பர் ரோல் பெட்டிகள் வந்தது கலெக்டர் அலுவலக அறையில் பாதுகாப்பாக அடுக்கி வைப்பு

 

தஞ்சாவூர், நவ.22:பெங்களூரில் இருந்து தஞ்சைக்கு வி.வி.பேட் கருவியில் பொருத்தப்படும் பேப்பர் ரோல் அடங்கிய பெட்டிகள் வந்தது. கலெக்டர் அலுவலக அறையில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து இறங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று வி.வி.பேட் கருவியில் பொருத்தப்படும் பேப்பர் ரோல் பெட்டிகள் பெங்களூரில் இருந்து லாரியில் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இறங்கியது. இந்த பேப்பர் ரோலானது வி.வி.பேட் இயந்திரத்தில் பொருத்தப்பட்டு யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை காண்பிக்கும் ஒப்புகை சீட்டாகும். மொத்தம் 216 பெட்டிகளில் பேப்பர் ரோல் வந்தது. ஒவ்வொரு பெட்டியிலும் 20 ரோல்கள் என 4320 பேப்பர் ரோல்கள் இருந்தது.இவைகள் லாரியில் இருந்து இறக்கி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

The post பெங்களூரில் இருந்து தஞ்சாவூருக்கு வி.வி.பேட் கருவியில் பொருத்தப்படும் பேப்பர் ரோல் பெட்டிகள் வந்தது கலெக்டர் அலுவலக அறையில் பாதுகாப்பாக அடுக்கி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Thanjavur ,Dinakaran ,
× RELATED ராமநகர மாவட்டம் இனி பெங்களூரு தெற்கு!!!