×

கலெக்டர் அலுவலகம் அருகே விவசாய சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

 

புதுக்கோட்டை, நவ.22: திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், அதனை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களில் போராட்ட குழுவினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா பகுதியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் அந்த திட்டத்தை உடனடியாக தமிழ்நாடு அரசை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், அதற்கு எதிராக அறவழியில் போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அனைத்து விவசாயிகள் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.

The post கலெக்டர் அலுவலகம் அருகே விவசாய சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Federation of Agricultural Societies ,Collector's Office ,Pudukkottai ,Tiruvannamalai ,Melma Chipkat ,Agricultural Association Federation ,Dinakaran ,
× RELATED குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 349 மனுக்கள் மீது உடனடி விசாரணை