×

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

 

பரமத்திவேலூர், நவ.22: பரமத்திவேலூரில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருச்செங்கோடு சப்கலெக்டர் சுகந்தி தலைமை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருட்கள் இருப்பு விவரங்கள், வேளாண் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல் படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் கோரிக்கை குறித்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி பேசியதுடன், தங்களின் கோரிக்கை மனுக்களை உதவி கலெக்டர் சுகந்தியிடம் வழங்கினர்.

குறைதீர் கூட்டத்தில் வருவாய் துறையினர், கால்நடை துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, நீர் வளத்துறை, கால்நடை துறை, கூட்டுறவு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பரமத்தி மற்றும் கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பத்திர பதிவுத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளை, பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து விபரம் அறிய அதிகாரிகள் அழைத்தும், யாரும் வராததால் ஏமாற்றம் அடைந்தனர். கூட்டத்தில் ராஜா வாய்க்காலில் மலக் கழிவுகள், ரசாயன கழிவுகள், சாக்கடை கழிவுநீர் நேரடியாக கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். கூட்டத்தில் பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, திருச்செங்கோடு தாசில்தார் விஜயகாந்த், கபிலர்மலை வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Farmers Grievance Day ,Paramathivelur ,Tiruchengode ,Sub ,Collector ,Sukanti ,Dinakaran ,
× RELATED கார்பைடு கல்லால் பழுக்க வைத்த 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்