×

கஞ்சா விற்ற 3 பேர் கைது

 

கிருஷ்ணகிரி, நவ.22: கிருஷ்ணகிரி தாலுகா எஸ்ஐ மும்தாஜ் மற்றும் போலீசார், புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள லைன்கொள்ளை பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சேது(22), அம்மன் நகர் நிதிஷ் கண்ணன்(20), திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஆகாஷ்(22) என்பதும், அவர்கள் ₹25 ஆயிரம் மதிப்பிலான 1.2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதை அடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri Taluk SI Mumtaj ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் பூச்சிக்கொல்லிகளை ரசீது...