×

உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் காலி பணியிடம் கரூர் அரசு அருங்காட்சியகத்தில் ஓவிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

 

கரூர், நவ. 22: கரூர் அரசு அருங்காட்சியகம் சார்பில் ஒவியப் போட்டி நடந்தது. கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒவியப் போட்டி நேற்று காலை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாமக்கல் மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன் கலந்து கொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்சிக்கு அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் குணசேகரன் வரவேற்றார். கரூர் மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் காமில் அன்சர் கலந்து கொண்டு பேசினார். அருங்காட்சியக இளநிலை உதவியாளர் கந்தசாமி நன்றி கூறினார்.

The post உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் காலி பணியிடம் கரூர் அரசு அருங்காட்சியகத்தில் ஓவிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு appeared first on Dinakaran.

Tags : Karur Government Museum ,Karur ,Dinakaran ,
× RELATED வாங்கல் அருகே உயர் ரத்த அழுத்த பாதிப்பால் மயங்கி விழுந்த பெண் பரிதாப பலி