×

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

 

திண்டுக்கல், நவ. 22: திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.  பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி. பெனாசிர் பாத்திமா பேசியதாவது: போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்,சமுதாய சீரழிவு குறித்தும், போதை பழக்கத்தினால் மாணவர்கள் பல்வேறு இன்னல்கள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

மேலும் போதை பொருள் வழக்கத்தினால் நற்பெயர் இழந்து மனதளவிலும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் குடும்பத்திற்கும் அவமானம் அதை பயன்படுத்தும் மாணவர்களின் குடும்பமும் சீரழியும் நிலை ஏற்படுகிறது. என பேசினார். மேலும், போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு குறும்படம் மாணவர்களிடம் காண்பிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் அனைவரும் போதை பொருள் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் ஆசிரியர்கள்,மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dindigul Chettinayakanpati Government Kallar Secondary School ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை