×

செட்டிபாளையத்தில் திருமணம் முடிந்து மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்ற புதுமண தம்பதி

 

கோவை, நவ. 22: தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யூ) சார்பில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொது பெட்டிகளை ஏசி பெட்டியாக மாற்றக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக ரயில்வே ஊழியர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டனர்.

அதன்படி, சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட கோவை கிளை சார்பாக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கூட்செட் ரோட்டில் உள்ள ரயில்வே பணிமனையில் ரயில்வே ஊழியர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நேற்று நடந்தது. சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமையில் நடந்தது. இதில், ரயில்வே ஊழியர்கள் சுமார் 150 பேர் ஆர்வமாக பங்கேற்று வாக்களித்தனர். இவர்களில் பலர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்ததாக தெரிகிறது.

The post செட்டிபாளையத்தில் திருமணம் முடிந்து மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்ற புதுமண தம்பதி appeared first on Dinakaran.

Tags : Chettipalayam ,Coimbatore ,Southern Railway Mastur Union ,SRMU ,Dinakaran ,
× RELATED முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது