×

மேலூர் அரசு கலைக் கல்லூரி அருகே போக்குவரத்து இடையூறாக கிடக்கும் மரம்: உடனடியாக அகற்ற வாகனஓட்டிகள் வலியுறுத்தல்

 

மேலூர், நவ. 22: மேலூர் அரசு கலைக்கல்லூரி அருகே நெடுஞ்சாலை ஓரமாக போக்குவரத்திற்கு இடையூறாக சாய்ந்துள்ள மரத்தை அகற்ற வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலூர் திருச்சி நெடுஞ்சாலையில் அரசு கலைக் கல்லூரி காம்பவுண்ட் சுவர் ஓரமாக நின்றிருந்த மிகப் பெரிய புளிய மரம் ஒன்று சாய்ந்து சாலை ஓரமாக விழுந்துள்ளது.

தொடர் மழை காரணமாக ஒரு பக்கமாக சாய்ந்த இந்த மரத்தால் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் சிரமப்படும் நிலை உள்ளது. இரு தினங்களாக போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள இந்த மரத்தை நெடுஞ்சாலை துறையினர் இன்னும் அகற்றாமல் உள்ளனர். போக்குவரத்து போலீசார் இந்த இடத்தில் நின்றே வாகனங்களை தணிக்கை செய்து வருகின்றனர். போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள இந்த மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மேலூர் அரசு கலைக் கல்லூரி அருகே போக்குவரத்து இடையூறாக கிடக்கும் மரம்: உடனடியாக அகற்ற வாகனஓட்டிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Malur State College of Arts ,Malur ,Malur Government College of Art ,Dinakaran ,
× RELATED வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட...